பட்டாசு வெடிக்க தடை தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

டில்லி:

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரிய மீனு மீதான விசாரணையின்போது,  பட்டாசு வெடிக்க தடை தேவையில்லை என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதி மன்ற  நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் அசோக்பூஷன் ஆகியோர் அமர்வில்  ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகள் மற்றும் நாடு முழுவதும் பட்டாசு தொழிலில் ஈடுபடுவோர், பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றம், தீபாவளி பண்டிகையின்போது, ஒரே ஒரு  நாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடையாது என்று கூறப்பட்டது.

இதையடுத்து,  பட்டாசுகள் வெடிக்க  முழுமையாக தடை செய்யும் முன்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் மாசு குறித்தும் ஆலோசிக்க வேண்டி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து என்ன கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், பட்டாசு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,  பட்டாசு வெடிக்க தடை தேவையில்லை என்று கூறி உள்ளது.

மேலும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கலாம் என்றும்  மனுவில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.