மும்பை

காராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் எம் எல் சி பதவி குறித்து அவர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.  சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.  அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரை அமைச்சரவை சட்டசபை மேலவை உறுப்பினராக (எம் எல் சி) தேர்வு செய்துள்ளது.

ஆனால் மேலவை உறுப்பினர் தேர்வை முடிவு செய்வது மாநில ஆளுநரின் பொறுப்பாகும். உத்தவ் தாக்கரேவின் தேர்வை இதுவரை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.   முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள்  மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது சிவசேனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார்.  அப்போது அவர் மோடியிடம், ஆளுநர் காலம் தாழ்த்துவது மாநிலத்தில் அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதாகவும் அதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.  மேலும் மாநிலத்தில் கொரோனா தாக்குதல் அதிக்ரித்து  வரும் வேலையில் பிரதமர் இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.