’’பாலியல் சர்ச்சையில் என்னை இழுக்க வேண்டாம்’’ ஹுமா குரேஷி கோபம்..

’’பாலியல் சர்ச்சையில் என்னை இழுக்க வேண்டாம்’’ ஹுமா குரேஷி கோபம்..

ரஜினிகாந்த்துடன் ’’காலா’’ படத்தில் ஜோடியாக நடித்த ஹுமா குரேஷி, தற்போது அஜீத் ஜோடியாக ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய நடிகை பாயல்கோஷ், தன்னை போல் பல நடிகைகளுக்கு அனுராக் , செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.

பாயல்,குறிப்பிட்ட நடிகைகளுள் ஒருவரான ரிச்சா சட்டா, இதனை .மறுத்துள்ளார். மேலும் தன்னை களங்கப்படுத்திய பாயலுக்கு, ரிச்சா சட்டா, வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தன்னிடம் அனுராக் தவறுதலாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரை ஹுமா குரேஷியும் மறுத்துள்ளார்.

ஹுமா குரேஷி, இயக்குநர் அனுராக்கின் ‘’ GANGS OF WASSEYPURY’ படத்தின் மூலம் தான் இந்தியில் அறிமுகம் ஆனார்.

ஹுமா விடுத்துள்ள அறிக்கையில் ‘’ அனுராக் என்னிடம் தவறுதலாக நடக்கவில்லை. நான் அறிந்த வரை வேறு யாரிடமும் அனுராக் தவறுதலாக நடந்ததில்லை. சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இதனால் இந்த விஷயம் குறித்து  இதுவரை கருத்து  எதுவும் சொல்லாமல் இருந்தேன்.

என்னை  இந்த பிரச்சினையில் சிக்க வைத்ததால் நான் ஆத்திரமாக உள்ளேன்.

மற்றவர்கள் மீது அவதூறு சொல்வோர்,,போலீசில் புகார் அளிக்க வேண்டியது தானே?’’. என அந்த அறிக்கையில் ஹுமா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.