இ-பாஸ் பெறவில்லையா? அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்…

சென்னை:
திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட தந்தை மகன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்றிருந்தார்.
இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சையாக்கி இருந்தார். உதயநிதி இபாஸ் செல்லாமல் சாத்தான்குளம் சென்றார், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனது சாத்தான்குளம் பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதில்,  மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம்.
இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.  னால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்து உள்ளார்.