சென்னை,

நெருப்புடா திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களை விமர்சிப்பவர்கள் அது தொடர்புடையவர்களின் மனம் புண்படாதபடி விமர்சிக்க வேண்டும்  என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு தயாரித்து,  நடித்துவரும் நெருப்பு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக  நடிகை நிக்கி கல்ரானி நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, விவேக், இயக்குனர் வாசு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் என திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இசையை வெளியிட்டு, பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  மறைந்த நடிகர்‌ சிவாஜி ‌கணேசன் குறித்து பேசினார். மேலும் சிறு கதை ஒன்றையும் கூறினார்.

மேலும்,  திரைப்படம் வெளியான உடனே சமூக வலைதளங்களில் அது‌பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வெளியாகி வருவதாக தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் நடிகர் விஷால், கூறிய கருத்தை, தான் ஆதரிப்பதாகவும் கூறினார்.

மேலும் படம் குறித்த  விமர்சனங்கள் முன் வைக்கப்பட வேண்டும் ஆனால் அது மனதை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் சத்தியராஜ், திரைப்பட விமர்சனம் நியாயமாக இருக்க வேண்டும் என்றும். மூன்று நாட்களுக்கு பிறகே விமர்சனம் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு நடிகர் லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.

விமர்சனம் என்ற பெயரில் படங்களை வெளியான தினத்தன்றே கொலை செய்துவிடக்கூடாது என்று நடிகர் விவேக் கேட்டுக்கொண்டார்.