Random image

நெட்டிசன்களே… என்னை இழிவுபடுத்தாதீர்கள்!: கதறி அழுத நடிகை நிலானி

ன்னைப் பற்றித் தெரியாமல் தரக்குறைவாக சமூகவலைதளங்களில் எழுத வேண்டாம் என்று நடிகை நிலானி கதறி அழுதார்.

உதவி இயக்குநர் காந்தி என்பவர்,  தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி தொந்தரவு அளிப்பதாக சின்னத்திரை நடிகை நிலானி, கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

புகாரைப் பெற்ற காவலர்கள், இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து அனுப்பினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நிலானி தலைமறைவாகிவிட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டனர். மேலும் அவரை மிக மோசமாக விமர்சித்தனர்.

இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை நிலானி சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“சம்பவம் நடந்த அன்று நான் கேகே நகரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். காந்தி படப்பிடிப்பு தளத்துக்கு வண்டியில வந்தார். நான் அங்கிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் என்னுடைய உதவியாளர் போன் பண்ணி, மேடம் இங்க ஒருத்தர் தீக்குளிச்சிட்டார் என்று தெரிவித்தார்.

எனக்கு மனதில் சந்தேகம் வந்தது. உடனே கிளம்பிச் சென்று  கேகே நகர் காவல் நிலையம் சென்று  விசாரித்தேன். காந்தி லலித்குமார் என்று கூறினார்கள்.

எங்கே  கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று கேட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன்.

எதிரியாகவே இருக்கட்டும். எனக்காக தீக்குளித்திருக்கிறானே என்று வருத்தப்பட்டேன்.

மருத்துவமனையில் அவன் அருகில் நான் இருந்தபோது,  அங்கிருந்தவர்கள், “ நீங்க இங்க இருந்தால் உங்கள அடித்துவிடுவார்கள். நீங்க கிளம்புங்க” என்று கூறியதால் அங்கிருந்து கிளம்பினேன்.

மற்றப்படி நான் தலைமறைவாகவில்லை.

இந்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை” என்றார்.

“காந்தி லலித்குமாரை நீங்கள் ஏமாற்றிவிட்டதாக அவரது சகோதரர்  கூறுகிறாரே” என்று கேட்டதற்கு, நிலானி தெரிவித்ததாவது:

“நான் காந்தியை ஏமாற்றவில்லை. அவரால்தான் நான் ஏமாந்தேன். அவர் என்னை என்னென்ன சித்திரவதை செய்தார் என்று அவரது சகோதரர்,  சகோதரிக்குத் தெரியும்” என்றார்.

“உங்களிடம் இருந்து அவர் பணம் வாங்கியிருக்கிறாரா அல்லது  அவரிடம் இருந்து நீங்கள் பணம் வாங்கியிருக்கிறீர்களா” என்று கேட்டதற்கு, “அப்படி எதுவும் கிடையாது. கைச்செலவுக்கு பணம் கொடுப்பேன். அவ்வளவுதான். ஆனால் மற்றப் பெண்களிடம் காந்தி நிறைய ஏமாற்றியிருக்கிறார். என்னிடம் உண்மையாகவே காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்கு காதலும் வேண்டாம்.  இன்னொரு கல்யாணமும் வேண்டாம் என்றுநான் தெளிவாக இருந்தேன்” என்று நிலானி பதில் அளித்தார்.

மேலும் அவர், “உதவி இயக்குநராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட காந்தி, நிறைய டைரக்டரிடம் எனது புகைப்படங்களை கொடுப்பதாக கூறினார். நாளடைவில் நன்றாக பழகினோம்.  ஆனால் அவர் ஒரு பெண் பித்தர் என்றும் குடிக்கு அடிமையானவர் என்றும் போகப்போக தெரிந்தது.

நான் கணவரைப் பிரிந்து வாழ்பவர். இரண்டு குழந்தைகளின் தாய்.  ஆகவே அவரிடமிருந்து ஒதுங்கினேன்.

எனக்கு என் இரு குழந்தைகள்தான் முக்கியம். அவர்கள்தான் என் உயிபர். என் வாழ்க்கை. அவர்களுக்காகத்தான் வாழ்கிறேன்.

ஆனால் சமூகவலைதளங்களில் என்னைப் பற்றி கேவலமாக எழுதுகிறார்கள். அபிராமியுடன் ஒப்பிடுகிறார்கள்.

என் கணவர் என்னை ஏமாற்றிச் சென்றுவிட்டார். இதில் என் தவறு என்ன?

கணவர் என்னை  ஏமாற்றி தவிக்கவிட்டு குழந்தையை விட்டுச் சென்றாலும், குழந்தைக்காக நான் வாழ்கிறேன்.

எனக்கு இன்னொரு திருமணம் செய்ய தெரியாதா? யாருடனாவது இருந்து சுகமாக வாழத்தெரியாதா?   குழந்தைகள் தான் உலகம் என்று நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  என்னை  சமூகவலைதளங்களில் ஏன் இவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள்” என்று நிலானி கதறி அழுதார்.