பெங்களூரு:

ர்நாடகாவை ஆட்சி செய்து வரும்  குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம்  அரசு எவ்வளவு காலம் உயிர்வாழும் என்று தெரியவில்லை, விரைவில் கவிழ வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பிரதமரும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா கூறி உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குமாரசாமி தலைமையில் ஆட்சி பதவி ஏற்றது முதல் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் ஓராண்டை கடந்துள்ளது.

ஆட்சியை கலைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வேன் என்று மிரட்டிய 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அமைதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவி கேட்டு தொல்லைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,  கர்நாடக மாநிலத்தில் இடைக்கால வாக்கெடுப்புகள் நடைபெறும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொல்லை கொடுத்துவதாக தெரிவித்தவர்,  அவர்கள் 5 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது அவர்களின் நடத்தையைப் பாருங்கள்.. என்று கூறியவர், . எங்கள் மக்கள் புத்திசாலிகள் என்றார்.

கடந்த 2018 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தங்களது கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதன் காரணமாகவே குமாரசாமி முதல்வர் பதவியைப் பெற்றார். இருப்பினும், அமுதல்வர் எச்.டி. குமாரசாமிக்கும், முன்னாள் முதல்வர்  சித்தராமையாவுக்கும்  இடையே தொடர்ந்து உராய்வு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தவர், காங்கிரசார் தற்போது ஆட்சி அமைக்க ஆசைப்படுகிறார்கள்.. இது மிகவும் கவலையாக உள்ளது என்றவர்,  பொது மக்கள் அவர்களின் நடத்தையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்  தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தோல்வி அடைந்த நிலை யில், காங்கிரசாரின் முணுமுணுப்பு அதிகரித்து வரும் நிலையில்,  கர்நாடகாவில் பலவீனமான JD(S) மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளது என்பதையே தேவகவுடா இடைக்கால வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.