மும்பை: உங்களின் இந்துத்துவா சான்றிதழ் தேவையில்லை என மாநில கவர்னருக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே பதில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு,பேருந்து, ரயில்  போக்குவரத்து உள்பட மதுக்கடைகள், பப்கள், கடற்கரைகள் உள்பட   பெரும்பாலான தளர்வுகளை அறிவித்துவிட்டது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இது கடுமையாக  விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கக் கோரி மகாராஷ்டிரா ஆளுநர்  பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் சித்திவினாயக் மந்திர் மற்றும் ஷீர்டி சாய் கோயில் உள்ளிட்ட கோயில்களை மீண்டும் திறக்கக் கோரிய கடிதத்தில் தெரிவித்தார். மாநில சட்டமன்ற பிரதிநிதிகளிடமிருந்து மூன்று பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ளதாகவும்,  கோஷ்யரி தனது “நீங்கள் திடீரென்று மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா?” என்றும் கோஷ்யரி கோடிட்டு காட்டியிருந்தார்.  அத்துடன்,  “மீண்டும் திறப்பதைத் தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா என்று நக்கல் செய்திருந்ததுடன்,  நீங்கள் திடீரென்று ‘மதச்சார்பற்றவர்களாக’ மாறிவிட்டீர்களா என்று ஆச்சரியப்படுவதாகவும்,  ‘மதுக்கடைகள், விடுதிகள் மற்றும் கடற்கரைகள் கூட திறக்க அரசாங்கம் அனுமதித்திருக்கும் நிலையில், மறுபுறம் எங்கள் தெய்வங்களும் , அதற்கான  இடங்களும் மூடப்பட்டுள்ளன’, இது முரண்பாடாக உள்ளது என்றும் கோஷ்யரி கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கவர்னர் கோஷ்யாரியின் கடிதம், உத்தவ்தாக்கரேவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கவர்னரின் கடிதத்துக்கு பதில்தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே,   “எனது இந்துத்துவா  குறித்து, உங்கள் சரிபார்ப்பு தேவையில்லை” , உங்களின் இந்துத்வா சான்றிதழ் தேவையில்லை என்றும்,   “மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு முக்கிய அங்கமல்ல, மாநில ஆளுநராக சத்தியப்பிர மாணம் செய்து கொண்டபோது நீங்கள் சத்தியம் செய்தீர்கள்” என்று தாக்கரே நினைவு கூர்ந்தார்.

‘‘லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது சரியானது அல்ல என மத்தியஅரசின் முடிவை விமர்சித்தவர்,  அதேபோல் ஒரே நேரத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிப்பது நல்ல விசயம் அல்ல. நான் ஹிந்துத்வாவை பின்பற்றுகிறவன். என்னுடைய இந்துத்வா உங்களால் சர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சித்திவிநாயக் கோயில், ஸ்ரீதி சாய் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சி மும்பையில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. பக்தர்களின் நம்பிக்கையை புறக்கணிக்கும் அதே வேளையில் மது பரிமாறப்படும் பார்கள் மற்றும் பப்கள் போன்ற இடங்களுக்கு “முன்னுரிமை” வழங்கியது நியாயமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.