சென்னை:

ந்தி மொழியை எதிர்க்கவில்லை ஆனால், இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்  என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று  இந்தி மொழி நாளை முன்னிட்டு, டிவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு என்றும், ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால், அது பரவலாகப் பேசப்படும் இந்தி மொழிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாளவன் உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை ஆனால், இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு என்றும் கூறி உள்ளார்.