கோவை:

மிழக மக்கள் பீதி அடைய வேண்டாம்; நம்பிக்கை இழக்க வேண்டாம் இன்னும்  2நாளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்  நம்பிக்கை தெரிவித்து  உள்ளார்.

தமிழகத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு போனது. இதன் காரணமாக  கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்,  தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாக மக்களிடையே பீதி, பயம், நம்பிக்கையின்மை நிலவி வருகிறது. ஆனால்,  யாரும் பீதி அடைய வேண்டாம். யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.

இந்த ஆண்டு  தென்மேற்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் பெய்யும். காற்றின் திசை மாற்றம் புயலின் தாக்கம் குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறியவர், நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் பொழிய தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேலும், கேரளாவிலும் அதிகளவில் மழை பெய்யும் என்று தெரிவித்தவர், அதன் அருகில் உள்ள கோவை அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும், இதன் காரணமாக  சிறுவாணி நீர்மட்டம் உயரும் என்றும் கூறினார்.

விவசாயிகள், பொதுமக்கள் இதுதொடர்பாக எந்தவிதமான அச்சமும் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.