கொல்கத்தா: என்ஆர்சி என்ற பெயரில் மத்திய பாரதீய ஜனதா அரசு நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

அஸ்ஸாமில் மேற்கொள்வது போன்ற என்ஆர்சி நடவடிக்கைகளை மேற்குவங்கத்தில் செய்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

அவர் கூறியுள்ளதாவது, “என்ஆர்சி என்ற பெயரில் மேற்குவங்க மாநிலத்தின் ஒரு குடிமகனைக்கூட மத்திய அரசால் தொட முடியாது. நாங்கள் என்ஆர்சி செயல்முறையை மேற்குவங்கத்தில் அனுமதிக்கமாட்டோம்.

மக்களை மதம் மற்றும் ஜாதிரீதியாக பிளவுபடுத்தும் அவர்களின் நடவடிக்கையை நாங்கள் அனுமதியோம். அஸ்ஸாமில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம். போலீஸ் படைகளைக் கொண்டு அவர்கள் அஸ்ஸாம் மக்களை அமைதியாக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள்.

ஆனால், அதே படையைக் கொண்டு அவர்களால் மேற்குவங்கத்தை அமைதியாக வைத்துவிட முடியாது” என்றார். அஸ்ஸாம் என்ஆர்சி நடவடிக்கையை எதிர்த்து, 5 கி.மீ. நீளமுள்ள பேரணியை மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் துவக்கி வைத்தார்.