ஒருவரின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்: காந்தி குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கம் குறித்து மத்திய அரசை சாடிய சிவசேனா!

மும்பை: சிவசேனா கடந்த சனிக்கிழமை காந்தி குடும்பத்திற்கு அளித்திருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை நீக்குவது குறித்து தமது கவலைகளை எழுப்பியது.

சிவசேனா, அதன் குரலான ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில், காந்தி குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெறுவது குறித்து கவலைகளை எழுப்பியது. டெல்லியாயினும் அல்லது மகாராஷ்டிராவாயினும் அரசியல்வாதிகள் தங்கள் சூழலில் பாதுகாப்பை உணர வேண்டும் என்று கூறியது.

சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பை சிஆர்பிஎப்பின் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பாக மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது.

‘பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் தங்கள் பாதுகாப்பை விட்டு வெளியேறத் தயாராக இல்லை, குண்டு துளைக்காத கார்களின் முக்கியத்துவம் அப்படியே உள்ளது.

இதன் அடிப்படையில் காந்திகளின் பாதுகாப்பை நீக்குவது குறித்த கவலை நியாயமானதாகும். இந்த கவலைகள் செல்லுபடியாகும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று சிவசேனா கருதுகிறது.

எஸ்பிஜி (திருத்தம்) மசோதா மீதான விவாதத்திற்கு புதன்கிழமை பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பழிவாங்கும் அணுகுமுறையுடன் பாஜக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த காலங்களில் இதுபோன்ற பல முடிவுகளை எடுத்தது காங்கிரஸ் தான் என்றும் கூறினார். உண்மையில் காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி