’’சுஷாந்த் மரணத்தை  அரசியலாக்க வேண்டாம்’’ -உத்தவ் தாக்கரே

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் மாதம் மும்பை பந்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம் வயதில் அவர் தற்கொலை செய்திருப்பது நாடு முழுவதும் அதிர் வலைகளை உருவாக்கியுள்ளது.


சுஷாந்த் தற்கொலைக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி வரும் நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல் –அமைச்சர் உத்தவ் தாக்கரே, கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இப்போது அவர் முதன் முறையாக மவுனம் கலைத்து பேசியுள்ளார்.
‘’ மும்பை போலீசாரும், மகாராஷ்டிர மாநில போலீசாரும் இப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் போராளிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்று குறிப்பிட்டுள்ள தாக்கரே ‘ இந்த வழக்கை திறம்பட கையாளும் திறமை நமது போலீசுக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது மும்பை போலீசாரை அவமானப்படுத்துவது போன்றதாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘’ சுஷாந்த் சிங் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம்.’’ என்றும் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி