வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது! டி.ராஜேந்தர்

சென்னை:

ரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.\

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டம் தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகஅரசு விதிக்கும் வரிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில்  திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு வரியை தமிழக ரத்து செய்ய வேண்டும் என்று திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், திரைப்படங்களுக்கு தமிழக அரசு 10% டிடிஎஸ் வரி விதிப்பது நியாயமற்றது, டிடிஎஸ் வரி விதிப்பது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.  மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ந்தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்தவர், இது தொடர்பாக அனைத்து அமைப்புகளையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினார்.