ரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று, “ ஓவியாவுக்கு ஆதரவுதராதீர்கள் மக்களே” என்று பிக்பாஸ் குடும்பத்தினர் சார்பாக சக்தி கேட்டுக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதையொட்டி சர்ச்சைகள் களைகட்டுகின்றன. இந்த நிலையில் மொத்தமம் கலந்துகொண்ட பதினைந்து பேரில் ஐந்து பேர் வெளியேறி/ வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

ஓவியா

மீதம் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவை மற்ற ஒன்பது பேருக்கும் பிடிக்கவில்லை.

“ஓவியா எந்த வேலையும் செய்வதில்லை… எவரையும் மதிப்பதில்லை..” என்று புகார் தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில் ஓவியா பற்றி பிக்பாஸிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்தனர். அவர்கள் சார்பாக நடிகர் சக்தி பேசினார்.

அப்போது அவர், “பிக்பாஸ்..! இங்கே எந்த வேலையும் ஓவியா பார்ப்பதில்லை. யாரையும் மதிப்பதில்லை” என்று புகார் படலம் வாசித்தார்.

அதோடு, “இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களே.. ஓவியா தப்பான ஆளு. ஓவியாவுக்கு  ஆதரவு தராதீங்க!” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  அதாவது ஓவியாவுக்கு ஆதரவாக வாக்களிக்காதீர்கள் என்றார்.

மக்களிடம் கோரிக்கை வைக்கும் சக்தி மற்றும் இதரர்

மேலும், “இந்த மாதிரி ஆளைப்பத்தி (ஓவியா) மக்களுக்குத் தெரியணும்.

பத்து பேர்ல 9 பேர் ஒண்ணாதான் இருக்கோம். ஏன்… 15 பேர் இருந்தப்பவே ஓவியா யாரையும் மதிச்சதே இல்லை… ஆகவே மக்களே ஓவியாவுக்கு ஆதரவு தராதீங்க!” என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அரசியல் பிரமுகர் போல் பேசினார்.

ஏற்கெனவே ஓவியாவுக்கு ஆதரவாக ஒன்றரை கோடி பேர் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, “ஒரு நடிகையை காப்பாற்ற ஒன்றரை கேடி பேர் வாக்களிக்கிறீர்கள்.. வெட்கமாக இல்லையா? அந்த ஒன்றரை கோடி வாக்கை எனக்கு அளித்திருந்தால் நான் உங்களைக் காப்பாற்றியிருப்பேனே” என்று பேசியதும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் போல நடிகர் சக்தி, மக்களே.. மக்களே என்று பேசியிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.