ந்திகிராம்

ரு பிராமணப் பெண்ணான தமக்கு பாஜக இந்து தர்மத்தைக் கற்பிக்க வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

எட்டு கட்டங்களாக நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.   இதில் மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்திய ஆளும் கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.   பாஜக பல திருணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு வலை வீசி வருகிறது.

சமீபத்தில் திருணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரிக்கு மம்தா பானர்ஜியுடன் நெருங்கிய நட்பும் நந்திகிராம் பகுதியில் நல்ல செல்வாக்கும் உள்ளது.   எனவே மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரியை நந்திகிராம் தொகுதியில் களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.  மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பதாக சுவேந்து அதிகாரி சவால் விட்டுள்ளார்.

இன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ள மம்தா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் தனது பிரசாரத்தில் சந்திபாத் ஸ்லோகங்களைக் கூறினார்.  அதன் பின்னர் அவர், “நான் எனது பெயரை மறந்தாலும் நந்தி கிராமை எப்போதும் மறக்க மாட்டேன்.  எனது பழைய தொகுதியான பாபானிபூரி சென்று பார்த்தால் நான் ஏற்படுத்திய வளர்ச்சியை புரிந்து கொள்ளலாம்.,

இந்துத்வா முத்திரையை வைத்து பாஜக என்னிடம் அரசியல் செய்ய வேண்டாம்.  நான் ஒரு இந்து பிராமணப் பெண்.  எனக்கு இந்து தர்மத்தை பாஜக கற்பிக்க வேண்டாம்.   தினம் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு நான் சந்திபாத் செய்துவிட்டுக் கிளம்புகிறேன்.   ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் இங்குப் பிறந்தவர்கள் போல் பேசுவது கொடுமை என்றால் நான் வெளி மாநில ஆள் என்பதைப் போல் பேசுவது அதை விடக் கொடுமை.” எனக் கூறி உள்ளார்.