சென்னை: அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? என தமிழக அரசின் அலட்சியத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சமீபத்தில் தமிழகஅரசு  மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கப் போவதாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுதது,  திமுக தலைவர் ஸ்டாலினும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அவர்  வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசும், மின் துறை அமைச்சர் தங்கமணியும் ஊழல் செய்வதற்காக மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாக தனியாருக்கு தாரைவார்த்து வருகின்றனர். அத்துடன் திமுக அரசு அமையும் போது ஒப்பந்தங்களில் உள்ள லாப கணக்குகளை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

இதையடுத்து மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் எண்ணம் கைவிடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

அதுபோல, நேற்று சென்னை மாநகராட்சி சார்பில்,  2021 ஜனவரி 1 முதல் குப்பை கொட்டுவதற்கு சென்னை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக தலைவர் மு.கஸ்டாலின், அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்தால், மாநகராட்சியின்அறிவிப்பு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில்,   குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுக அரசியன் அவலத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையா விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் @PThangamanioffl‘குப்பை கொட்டவும் வரி’ அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் @SPVelumanicbe

அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்! என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.