வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலானது எண்ணெய் விலைகளை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சப்படுவதுடன், புதிய மத்திய கிழக்கு சிக்கலை உண்டாக்கிவிடும் என்ற பதற்றமும் நிலவுகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. சனிக்கிழமை சவூதி அரம்கோ மீதான நடத்திய தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை உண்டாக்கியதோடு, கச்சா எண்ணெய் விலையையும் கடுமையாக உயரச் செய்தது.

ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுக்கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்துசெய்து, ஈரான் மீது பல பொருளாதார தடைகளை விதித்தது முதற்கொண்டே, அமெரிக்கா – ஈரான் உறவு மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.