டூடுல் வெளியிட்டு இந்திய எழுத்தாளரை கவுரவித்த கூகுள்!

ந்திய எழுத்தாளருக்கு கவுரவிக்கும் வகையில் இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது பிரபல வலைதள நிறுவனமான கூகுள்

இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ படத்தை டூடுலாக வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவப்படுத்தி உள்ளது.

எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவி 1930 ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர்.

உருது எழுத்தாளரான தேஜஸ்நவி உருது மொழியில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரபலம். இவர் கடந்த 2011ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.

அவரது பிறந்த நாளான இன்று, அவரது இலக்கிய சேவையை போற்றும் வகையில், கூகுள் தேடுதளத்தில் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.