இந்தியில் ரீமேக் ஆகும் மகேஷ் பாபுவின் கமர்ஷியல் திரைப்படம் ‘தூக்குடு’…..!

2011-ம் ஆண்டு ஸ்ரீனு வாய்ட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த கமர்ஷியல் திரைப்படம் ‘தூக்குடு’.அன்றைய நாளில் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த படம் ‘தூக்குடு’.

சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ரீமேக்கில் நாயகனாக யார் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது .

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.