மகாராஷ்டிராவில் பத்திரிகை விற்பனைக்கு ’திடீர்’ தடை..

மகாராஷ்டிராவில் பத்திரிகை விற்பனைக்கு ’திடீர்’ தடை..

ஊரடங்கில் இருந்து பத்திரிகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுவதால் அந்த மாநிலத்தில் நாளை முதல் ( 20 ஆம் தேதி) வீடு, வீடாகப் பத்திரிகைகளை விநியோகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ‘டோர் டு டோர்’’ டெலிவரி கிடையாது.

ஆனாலும் காட்சி ஊடகங்களுக்கு ( டி.வி., இணையம்) தடை ஏதும் இல்லை.

‘’ பத்திரிகை டெலிவரிக்கு தடை விதித்துள்ளது குறித்து அதன் உரிமையாளர்களிடம் விளக்கி உள்ளேன். அவர்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தடையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

‘’பத்திரிகை மூலமாக  கொரோனா வைரஸ் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அதனை விநியோகம் செய்யத் தடை விதித்திருப்பதை ஏற்க முடியாது. இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

– ஏழுமலை வெங்கடேசன்

You may have missed