‘ராமாயணம்’ ‘மகாபாரதம்’ தொடர்ந்து, தூர்தர்ஷனில் ‘ஸ்ரீ கிருஷ்ணா மறுஒளிபரப்பு….!

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கின் இந்த நாட்களில், தூர்தர்ஷன் தனது சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளான ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’, ‘சாணக்யா’, ‘சக்திமான்’, ‘தேக் பாய் தேக்’ போன்றவற்றை திருப்பி ஒளிபரப்புகிறது.

காவிய நிகழ்ச்சியான ராமானந்த் சாகரின் ‘ராமாயணம்’ மற்றும் பி.ஆர்.சோப்ராவின் ‘மகாபாரதம்’ ஆகியவற்றின் மறு ஒளிபரப்பினால் டிஆர்பியில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது தூர்தர்ஷன்.

இப்போது ‘ஸ்ரீ கிருஷ்ணா’ சீரியல் தூர்தர்ஷனில் திரும்பப் போகிறது. ராமாயணம்’ படத்துடன், ‘ஸ்ரீ கிருஷ்ணா’ படத்தையும் ராமானந்த் சாகர் இயக்கியுள்ளார். இந்த தகவலை பிரசர் பாரதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

ராமானந்த் ஆர்ட்ஸ் தயாரித்த இந்த சீரியல் முதலில் தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் 1993 இல் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் 1996 ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.