புதுடெல்லி: பொதுசேவை ஒளிபரப்பு பிரிவான தூர்தர்ஷன், அமேசான் இந்தியாவில், வியாபாரப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

பிரசார் பாரதி அமைப்பின் ஒரு பிரிவான இந்த தூர்தர்ஷன், ஹும்லாக், பனியாட், இ ஜோ ஹாய் சிண்டாகி, மால்குடி டேய்ஸ், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக இளம் பார்வையாளர்களை கவர முயற்சித்து வருகிறது.

அமேசான் இந்தியாவில் தூர்தர்ஷன் தொடங்கியுள்ள ஞாபகார்த்த அங்காடியில், காஃபி குடுவைகள், டி-ஷர்ட்டுகள், ஸ்லிப்பர்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

அந்தப் பொருட்களில் “நான் உங்கள் டிஎன்ஏ -வில் இருக்கிறேன், நான் உங்கள் தூர்தர்ஷன்” என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.

புதிய யுக டிஜிட்டல் இந்தியாவுடன் இணைவது தூர்தர்ஷனின் நோக்கங்களில் ஒன்று என பிரசார் பாரதியின் முதன்மை செயல் அதிகாரி சஷி ஷேகர் வெம்பதி கூறியுள்ளார்.