Random image

டில்லி: வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்…..நாளை தொடக்கம்

டில்லி:

வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள் திட்டத்தை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டத்தை நாளை (10-ம் தேதி) அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

வருவாய் துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து துறை, குடிநீர் வாரியம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை தொடர்புடைய 40 சேவைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,‘‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்குகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.