Random image

வீடு தேடி வரும் அரசு சேவை: போலி முகவரிகளால் அவதிப்படும் டில்லி அதிகாரிகள்

டில்லி :

ட்டுனர் உரிமம் முதல், திருமண சான்றிதழ் வரை, 40 வகையான சான்றிதழ்களை வீடு தேடி வந்து வழங்கும் திட்டத்தை, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இதுவரை 372 வீடுகளுக்கு சென்று சப்ளை செய்த நிலையில், அதில் 76 பேர் போலி முகவரி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில்  சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கவும் முடிவு செய்த ஆம்ஆத்மி அரசு,.பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்க மாநில அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

அதன்படி  இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தனியார் ஏஜன்சிகள் நியமிக்கப்பட்டுள்ளன.  சான்றிதழ்கள் தேவைப்படுவோர், அரசு அறிவித்து உள்ள ஏஜன்சிக்கு போன் செய்ய வேண்டும். அங்கு கேட்கும் விபரங்களை, போனிலேயே கூற வேண்டும். பின், ஏஜன்சியைச் சேர்ந்த அலுவலர், வீட்டுக்கே வந்து, தேவைப்படும் ஆவணங்களின் நகலை பெற்றுச் செல்வார்.

ஆவணத்தை ஆய்வு செய்து, அதிகாரிகள் அளிக்கும் சான்றிதழை, ஏஜன்சி ஊழியர், வீட்டுக்கே வந்து வழங்குவார். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக, 50 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி தற்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் துரதிருஷ்டவசமாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பலர் தவறான முகவரிகளை கொடுத்து அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

கடந்த  வியாழக்கிழமை வரை மொபைல் அழைப்பு காரணமாக  372 குடும்பங்களுக்கு நேரில் விஜயம் செய்ததாக கூறியுள்ள அதில், 76 போலி முகவரிகள் என கூறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை வரை இந்த சேவையை பெற 5217 அழைப்புகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.