க்னோ

நான்காம் கட்ட ஊரடங்கை மே 31 வரை நீட்டித்த உத்தரப்பிரதேச அரசு விதிகளில் சில  தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது.  அது இருமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது நான்காம் கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்படுத்த பகுதிகள் தவிர மற்ற பகுதிகளைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலமாகப் பாதிப்பைப் பொறுத்து மாநில அரசுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதில் பல விதிகள் தளர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

நான்காம் கட்ட ஊரடங்கில் உபி மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

காய்கறிகள் மொத்த சந்தைகளைத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் காலை 4 மணி முதல் 7 மணி வரை இயக்கலாம்.  காய்கறிகள் சில்லறை விற்பனையைக் காலை ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தலாம்.

மாநிலம் முழுவதும் இரவு நேரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவசியத் தேவைத் தவிர மற்ற வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

தனியார் வாகனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மொத்தம் நால்வர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.  இரு சக்கர வாகனங்களில் பின்னே அமர்ந்து செல்லப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.  ஆட்டோக்களில் ஓட்டுநருடன் மொத்தம் மூன்று பேர் மட்டும் பயணம் செய்யலாம்.

தெரு வியாபாரிகளும் வண்டிகளும் மாநிலத்தில் இயங்கலாம்.

உணவகங்களில் பார்சல் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி

விழா அரங்குகள் இயங்க அனுமதி உண்டு  ஆனால் திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்படும்.  ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

கட்டுப்பாடு பகுதிகளில் இல்லாத அச்சுக்கூடம், டிரை கிளீனர்ஸ், தொழிற்சாலை நடவடிக்கைகள், மற்றும் இனிப்புக் கடைகள் திறக்க அனுமதி உண்டு.

அவசர அறுவை சிகிச்சைகளுக்குத் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ விடுதிகள் திறக்கலாம்.

நான்காம் கட்ட ஊரடங்கில் உபி மாநிலத்தில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள்

பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் திறக்க அனுமதி இல்லை.

மத சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் நடத்தக் கூடாது.

ஆம்புலன்ஸ் தவிர மற்ற அனைத்து ஏர் கண்டிஷன் வாகனங்களும் இயங்க தடை

அனைத்து நகரப் போக்குவரத்துகளுக்கும் தடை

கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தவிர மற்ற அனைத்து சேவை நடவடிக்கைகளுக்கும் தடை

திரையரங்குகள், வணிக வளாகங்கள், மற்றும் ஜிம்கள் இயங்கக் கூடாது.