சென்னை

நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை, செங்கல்பட்டு,, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சென்ற மாதம் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளது.  இந்த தளர்வுகள்  இல்லாத ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.   நாளை முதல் தளர்த்தப்பட்ட புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகள் வருமாறு :

* தேநீர்க் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொட்டலம் சேவை  மட்டும் அனுமதிக்கப்படும்.

* தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி  வழங்கப்படும்.

* இந்த பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற  வேண்டும்.

* காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

*  வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) ஏற்கனவே அறிவித்து இருந்த  வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

 * ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவை குறைந்த பயணிகளைக் கொண்டு இயங்கலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50  சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* குறைந்த பணியாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கவும் 6ம் தேதி முதல்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி அடிப்படையில் இயங்கும். முடிதிருத்தகம் மற்றும் அழகு  நிலையங்கள் குளிர்சாதனங்களைப் பயன்படுத்தாமல், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படலாம்.