சென்னை: நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவித் துள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஃபாஸ்டேக் இல்லை என்றால், இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று விதிகளை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த ஆண்டு டிசம்பர் 15ந்தேதி  முதல், நாட்டின் அனைத்து சுங்க வரிவிதிப்புகளிலும் ஃபாஸ்டேக் முறைடிய மத்திய அரசு வேகமாக கட்டாயமாக்கியது.  எந்தவொரு தடங்கலும் இல்லாமல்  நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதை உறுதி செய்ய ஃபாஸ்டாக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கும் முயற்சியில் நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு வாகனம் அதே வழியில் சென்று விட்டு 24 மணி நேரத்திற்குள் திரும்பினால், அவர்கள் சலுகையை பெற முடியும்.  இதனால் வாகன ஓட்டிகள், டோல் பிளாசாவின் பண கவுண்டரில் நீண்ட வரிசையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டியதை தவிர்க்க முடியும்.

அதே வேளையில், உங்களிடம் ஃபாஸ்ட் டேக் இல்லை என்றாலோ, ஃபாஸ்டேக் செயல்படா விட்டாலோ, வாகனம் ஃபாஸ்டேக் பாதையில்  நுழைந்தால், நீங்கள் இரட்டை கட்டண வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.