c

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலை காட்ட… பதறிப்போய் அதை தடுத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடுகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இவரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஸ்மிருதி இரானி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு தாமரை மொட்டுகளால் கோக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.  அந்த நேரத்தில்  ஸ்மிருதி இரானி வெற்றியைக் குறிக்கும் வகையில், இரட்டை விரலைக் காட்டினார்.
பொதுவக  இரண்டு விரல்களை அசைத்துக் காட்டினால் அது வெற்றியின் சின்னம். அதாவது ஆங்கிலத்தில் விக்டரி (வெற்றி) என்று அர்த்தம்.
அதுவே, அந்த விக்டரி சின்னம், தமிழகத்தில் இரட்டை இலை என்கிற தேர்தல் சின்னமாக கருதப்படுகிறது.
இதை அறியாத ஸ்மிருதி இராணி, இரட்டை விரலைக் காண்பிக்க… பதறிவிட்டார் தமிழிசை. ஆனாலும் முகத்தில் புன்னமை மாறாமல்   ஸ்மிருதியை உரிமையோடு தடுத்து நிறுத்தினார்.
ஸ்மிருதி இரானியின் இரு விரல்களை மடக்கிய தமிழிசை, முழுவதுமாக கையசைக்கச் செய்தார். இதனால் அப்பகுதியில் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சமீபத்தில் வாக்குகேட்ட நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சின்னமான இரட்டை மெழுகுவர்த்தியைச் சொல்லாமல், வழக்கம்போல “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” என்று கேட்டதும் சமீபத்தில் நடந்தது.