டில்லி:

ரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் இரு அணிகளஉக்கும் இல்லை என்று தேரத்ல ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ( சசிகலா) அதிமுக ( ஓபிஎஸ்) என இரு அணிகளாக பிரிந்து உள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை பெற இரு அணிகளும் போராடி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம்  22ந்தேதி (இன்று) இறுதி முடிவை தெரிவிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் டில்லியில் தேர்தல் ஆணையத்தின் முன் இன்று தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியிருக்கிறது. ஆகவே ஏப்ரல் 12ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த சின்னத்தின் பெயரையோ, அதிமுக என்ற பெயரையோ கூட இரு அணிகளும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.