சென்னை:

ன்று சென்னையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா ஜெயலலிதா சிலையை யார் திறந்தது என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை இன்று ஆளும் அதிமுக பிரம்மாண்டமாக கொண்டாடியது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது. இதை இன்று சென்னை வந்த பிரதமர் மோடி திறக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து சிலையை யார் திறப்பது என்று அ.தி.மு.க. உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சமீபகாலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான பனிப்போர் நிலவுகிறது.

இதன் வெளிப்பாடாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால்தான்,  அதிமுகவில் தனது அணியை இணைத்ததாக ஓபிஎஸ் கூறினார். இதை  எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

இந்த நிலையில் இரு தரப்புக்கும் மோதல் போக்கு ஏற்படாமல் இருக்க, இருவரும் சேர்ந்து ஜெயலலிதா சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சிலை திறப்பின்போது இருவருக்கும் தனித்தனி ரிமோட் அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இருவரும் ரிமோட்டை ஆன் செய்ய, சிலை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரே நேரத்தில் இரு ரிமோட்கள் மூலம், சிலை திறக்கும் சென்சாரை இயக்க முடியாது. ஆகவே யாருக்கு ஒரிஜினல் ரிமோட் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் சிலையைத் திறந்த்து ஓ.பி.எஸ்ஸா, ஈ.பி.எஸ்ஸா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.