டாக்கா

உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மூன்று முறை வங்கதேச பிரதமராகப் பதவி வகித்த வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியாமீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது.  அதில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுக் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்  சென்ற மார்ச் மாதம் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது,

கொரோனா அச்சம் காரணமாக வங்க தேசத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கலிதா ஜியாவை தற்போதைய பிரதமர் ஷேக் அசீனாவின் ஒப்புதல் பெற்று சிகிச்சைக்காக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது,  கடந்த மார்ச் 25 முதல் அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கலிதா ஜியாவின் சகோதரி செலிமா, “இன்னும் கலிதா ஜியா வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது.  எனவே மருத்துவ நிபுணர்கள் அவரை வாரம் ஒரு முறை பரிசோதித்து வ்ருகின்றன்ர்” எனத் தெரிவித்துள்ளார்.

கலிதாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக எழுந்த சந்தேகம் குறித்து செலிமா ஏதும் தெரிவிக்கவில்லை.