சென்னை மக்கள் தொகை குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை

சென்னை நகர மக்கள் தொகை அதிகரித்து வருவது குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து கூறி உள்ளார்.

பாமக வின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசின் மகனும் அக்கட்சியின் இளைஞர் அணித் தலவருமான அன்புமணி ராமதாசும் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். சென்னையில் மதராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு உள்ளது.

அந்த அமைப்பின் சார்பில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. அந்த கருத்தரங்கில் மருத்துவர் அன்புமணி கலந்துக் கொண்டார். அன்புமணி ராமதாஸ் அப்போது சிறப்புறை ஆற்றினார்.

அன்புமணி ராமதாஸ் தனது சிறப்புரையில், “சென்னையில் மக்கட்தொகை அதிகமாக உள்ளது. சென்னை ஒரு தனி நாடாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் மக்கட் தொகை அடிப்படியில் சென்னை 118 ஆம் இடத்தில் இருக்கும்” என கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி