ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம்

சென்னை

ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷனில் ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை பதித்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது.  ஆறுமுக சாமி தலைமையில் நடைபெறும் இந்த கமிஷன் விசாரணையில் டாக்டர் பாலாஜி சாட்சி அளித்துள்ளார்.

அப்போது அவர் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தேர்தல் வேட்பு மனுக்களில் கை ரேகை இடும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார் என தெரிவித்துள்ளார்.  அது மட்டும் இன்றி அப்போது தாமும் சசிகலாவும் மட்டுமே அங்கு இருந்ததாகவும்,  அரசு மருத்துவக் குழுவோ, அமைச்சர்களோ ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் பார்க்கவில்லை என கூறி உள்ளார்.

பெங்களூரு சிறையில் பதிவாகி உள்ள ஜெயலலிதாவின் கைரேகையுடன் இந்த ரேகையை ஒப்பிட்டு பார்க்க விசாரணைக் கமிஷன் முடிவெடுத்துள்ளது.