சென்னை:

ஜெயலலிதாவின் கைரேகை போலி என்பது உறுதியான நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும், ஜெ. கைரேகை தொடர்பாக கடிதம் கொடுத்தவருமான  மருத்துவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், அதிமுகவினர்  வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜெயலலிதாவின் மரணத்தின் மீதான சந்தேகம் மேலும் வலுப்பட்டுள்ளது. அவர் ஸ்லோ பாய்சன் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புகார் உண்மையாக இருக்குமோ என்றும் கேள்வி எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில், போலியான கைரேகைக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் பாலாஜி  மீதும், தேர்தல் அலுவலர்கள் மீதும்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்புமனு  தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார். அதுபோலியானது என தேர்தலில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திமுக வேட்பாளர்  சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா கோர்ட்டில்  சாட்சியம் அளித்துள் ளார். தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலை யில்,  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளரான வில்ஃபிரட் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளித்தார்.

அப்போது, மருத்துவ சான்றிதழ்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, அதிமுக அவைத்தலைவ ராக இருந்த  மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே  கைரேகைப் பதிவை தேர்தல் ஆணை யம் ஏற்றுக் கொண்டது என வில்ஃப்ரெட் பதில் கூறினார்.

இந்நிலையில், அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை பார்க்க யாரையுமே அனுமதிக்காத நிலையில், அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்கு ஒப்புதல் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் மீண்டும் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது,  ஜெயலலிதா தான் கைரேகை வைத்தார் என்று மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்ற விசார ணைக்கு ஆஜரான போதும், ஜெ.வின் கைரேகைதான் என்று மீண்டும் பொய் கூறினார் பாலாஜி.

ஆனால், நேற்று உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், மருத்துவர் பாலாஜி கூறியது பொய் என்றும், அது ஜெயலலிதாவின் கைரேகை அல்லது என்றும் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவர் பாலாஜி அளித்த சாட்சியம் பொய் என்பது அம்பலமாகி உள்ளது.

இந்த, முக்கிய இந்த விவகாரத்தில் பொய்யாக ஒப்புதல் கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நீதி மன்றத்தில் ஆஜராகி பொய் வாக்குமூலம் அளித்த மருத்துவர் பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே வேளையில், இந்த கைரேகை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுக ளும் சட்டப்படி சரியல்ல என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஜெயலலிதாதான் கைரேகை  வைத்தாரா என்பதை, உறுதி செய்யும் வகையில், அப்போலோ நிர்வாகத்தில், அதற்கான வீடியோவை வாங்கி தேர்தல் ஆணையம்  உறுதி செய்திருக்க வேண்டும்.. அல்லது தேர்தல் கமிஷன் விதிப்படி, தேர்தல் ஆணையர் முன்னிலையில் ஜெயலலிதா கையெழுத்திட்டிருக்க வேண்டும்… ஆனால், இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும் இதில் குற்றவாளிதான்… 

இதையெல்லாம் பார்ககும்போது, எதிர்க்கட்சிகள் கூறுவது  உண்மைதானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெ.உயிரோடு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.  அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே அப்போதைய நிகழ்வுகள் அரங்கேறின. ஜெ.வை பார்க்க அப்போலோ  வந்த எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ராகுல்காந்தி உள்பட சிகிச்சை பெற்று வந்த  ஜெயலலிதாவை  பார்க்க  அனுமதி வழங்கப்படவில்லை. இது சர்ச்சையை உருவாக்கி இருந்தது.

இந்த நிலையில்தான  75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா,  இன்று டிஸ்சார்ஜ் ஆவார், நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தினசரி ஒரு தகவலை தெரிவித்து வந்த நிலையில், கடைசியாக ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற குண்டை போட்டு அவரது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஏற்கனவே ஜெயலலிதாவை மிரட்டி அவரின் சொத்துக்களை பறிமுத்து விட்ட சசிகலா குடும்பத்தினர், அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டு விட்டதாக அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படிதான் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர் பாலாஜியின் பொய்யும்  சென்னை உயர்நீதி மன்றத்தால் தெளிவு படுத்தப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள சந்தேகம் மேலும் வலுவடைந்து உள்ளது. அதிமுகவினர் குற்றம் சாட்டி வரும்,  ஜெயலலிதா  ஸ்லோ பாய்சன் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புகார் உண்மையாக இருக்குமோ என்ற கேள்வியும்  எழுந்துள்ளது.

மருத்துவர் பாலாஜியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த தேர்தல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அப்போலோவில்  முழு மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டவர்  டாக்டர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.