விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டர் ஓரினச்சேர்க்கையாளரா?

மெரிக்காவின் யுனைட்டெட் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப் பட்ட மருத்துவர் டோவ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.  அவர் குறித்து மேலும் பல வித்தியாசமான தகவல்களும் வெளியாகி உள்ளன.

அமெரிக்க விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மருத்துவர் டோவ், பலத்த காயமடைந்திருப்பதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

69 வயதான மருத்துவர் டோவுக்கு 5 வாரிசுகளும், தெரசா என்ற மனைவியும் உள்ளனர். 5 க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

விமானத்தில் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது தொடர்பாக. யுனைடெட் விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர, மருத்துவர் டோவ் இரண்டு சீனியர் வழக்கறிஞர்களை அமர்த்தி உள்ளார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சுமார் 100 கோடி ரூபாய் இழப்பீடாக கோரி மருத்துவர் டோவ் வழக்குத் தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மருத்துவர் டோவ், ஓரினச் சேர்க்கையாளர் என்றும், 26 வயது பிரையன் கேஸ் என்ற இளைஞருடன் அவர் ஓரினச் சேர்க்கை வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2003ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரையன் கேஸ் என்பவர், மருத்துவர் டோவிடம் சிகிச்சைக்காக வந்தவர் என்றும், பின்னர் அவரை தமது ஓரினச்சேர்க்கை இச்சைக்காக மருத்துவர் டோவ் பயன்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் யுனைடெட் விமான நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர் டோவ் மிகுந்த கோபக்காரர் என்பதோடு, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமில்லாதவர் என்றும், இதற்கான மருத்துவ ரீதியான ஆதராங்கள் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், போலியான மருந்துச் சீட்டுகள் கொடுத்தல், போதை மருந்துகள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக சிறைத்தண்டனை பெற்ற மருத்துவர் டோவின், மருத்துவருக்கான உரிமமே பறிக்கப்பட்டதாகவும், பின்னர் 2015 ஆம் ஆண்டில், ஒருபகுதி மருத்துவ சேவைக்கான உரிமம் மட்டும் மருத்துவர் டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் மருத்துவர் டோவின் மேல் உலகளாவிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு இத்தகைய குற்றப்பின்னணிகள் இருப்பது, தற்போதைய விவகாரத்திற்கான நீதிகிடைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

எதுஎப்படி இருந்தாலும், யுனைடெட் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஸ்கார் மோனுஸ், மருத்துவர் டோவ் விமானத்தில் இருந்து மோசமான முறையில் வெளியேற்றப்பட்ட vதற்காக மன்னி்ப்புக் கோரியுள்ளார். ஆனால், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை மட்டும் வாய்திறக்கவில்லை என்று, அமெரிக்க வாழ் ஆசியர்கள் குமுறுகிறார்கள்.

You may have missed