ஸ்ரீநகர்:

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு, தனது எம்.பி. நிதியில் இருந்து  ரூ.1 கோடியை ஒதுக்கி உள்ளார் ஃபரூக் அப்துல்லா எம்.பி.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு, கடந்த 13ந்தேதி விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது, உலக நாடுகளை பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இங்கு நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கொரோனா தொற்றுக்கு 4 பேர் ஆளாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.1 கோடி நிதியை அம்மாநில எம்.பி. ஃபரூக் அப்துல்லா ஒதுக்கி உள்ளார்.

இந்த நிதியில், ஸ்ரீநகருக்கு ரூ .50 லட்சமும், புட்கம் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களுக்கு தலா ரூ .25 லட்சமும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.