லக்னோ :

உ.பி.,யில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபில்ஹானை  அம்மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

இது உ.பி. அரசின்  மக்கள் விரோத போக்குக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு எனவும், இஸ்லாமிய மக்களை வேண்டுமென்றே அரசு பழி வாங்குகிறது என்றும்  விமர்சிக்கப்படுகிறது.

கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் ஆக்சிஜன் சப்ளை இன்றி கட்ந்த ஒரு வாரத்தில்  63 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் கபீல்கான் என்பவர் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளைக் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியானது.

அவருக்கு பொதுமக்களிடையே எழுந்த பெரும் வரவேற்பு மற்றும்  பாராட்டு காரணமாக கடுப்படைந்த  உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை பதவியில் இருந்து நீக்கியது. அந்த இடத்திற்கு பூபேந்தர் சர்மா என்ற டாக்டரை பணியில் நியமித்துள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் கிளினிக்குகள்

டாக்டர் கபில்ஹான்  பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, அவர் தனியாக மருத்துவம் பார்த்து வருவதாக காரணம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கபில்ஹான்  நீக்கப்பட்டதற்கு உ.பி. மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கபில்ஹான் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், கோரக்பூரில் பி.ஆர்.டி. மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனை வளாகத்திலே உள்ளே, மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்திலேயே பெரும்பாலான மருத்துவர்கள், தாங்கள்  குடியிருக்கும்  உள்ள குடியிருப்பு பகுதியிலேயே, தனியாக கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்துள்ளது.

சீனியர் மருத்துவர்களே இதுபோன்று தனியாக கிளினிக் வைத்து சிசிக்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி முதன்மை டாக்டர் ஆர்.கே. மிஸ்ரா, கல்லூரி வளாகத்தில் டாக்டர்கள் இதுபோல கிளினிக் வைத்திருப்பது  வியாபார நோக்கம் என்று கூறியுள்ளார்.

ஆனால்,  டாக்டர் ஆர்.கே.மிஸ்ராவின் வீடு அருகிலேயே டாக்டர் மோகன் குடும்பத்தினரின் கிளினிக் உள்ளதாக போர்ட்டுகள் உள்ளன. அதில் 3 மருத்துவர்கள் தனியாக சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

டாக்டர் கபில்ஹான்

அதில், ஓய்வுபெற்ற டாக்டரான கைனகாலஜிஸ்ட், ரேணு மோகன்,  அவருடைய கணவர் தோல் ஸ்பெஷலிஸ்டான லலித் மோகன், அவரது மகன் மோகன் ஆகியோர் சிகிச்சை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் தொடர் இறப்பு நேரிட்டபோது, இந்த குடும்பத்தின் மருத்து வர்கள் ஒருவர்கூட மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மீடியாக்களில் செய்தி பரவியதும், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரேணு மோகன், “நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் அல்லது குண்டர்கள் அல்ல. இந்த  நடைமுறை (கிளினிக்) வாயிலாக பொதுமக்களுக்கு  நாங்கள் நல்லதுதான் செய்துள்ளோம்.  எங்களுக்குத் தெரிந்தவர்கள் கூட, ஊடகவியலாளர்கள் கூட இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள் என்று கூறினார்.

இதேபோல் நியூரோ சர்ஜியன் ஒருவரும் தனியாக கிளிக் வைத்துள்ளார். மேலும் பலர் கிளினிக் வைத்துள்ளதாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரியில் உள்ள டாக்டர் காலனியில் மருத்துவர்கள் தங்கியுள்ள வீட்டின் அடுத்த பகுதியில்  பெரிய நீலகலர் போர்டுகள்ள் உள்ளன. அதில் அந்தந்த மருத்துவர்களின் பணி நேரம் மற்றும் அவர்களது சாதனைகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல் பல மருத்துவர்கள் பணி நேரத்தின்போது, தாங்கள் நடத்தி வரும் கிளினிக் சென்று தனியாக மருத்துவம் செய்துவருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வேண்டுமென்றே ஒருசில சிகிச்சைக்காகவும், அல்ட்ராசவுண்ட்  ஸ்கேன் சி கிச்சை போன்றவற்றிற்காக ஒரு மாதம் வரை காத்திருக்க வைக்கப்பட்டு, பின்னரே அதற்கான நேரம் ஒதுக்கப்படுகிறது என்றும்,

இதன் காரணமாக நோயாளிகள், அந்த மருத்துவர்கள் தனியாக பணியாற்றி வரும் தனியார் மருத்துவமனைக்கும், ஸ்கேன் சென்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறர்கள் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது கபில்ஹானை தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதாக கூறி பதவி நீக்கம் செய்துள்ள அரசுக்கு ஏன் இந்த விஷயங்கள் தெரியவில்லை.. இதுவரை இதுகுறித்த தகவல் ஏன் வெளியில் வரவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

“இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருகையில், இந்த டாக்டர்கள் அனைவரும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கவனித்து கொள்வதால்,  அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று  நோயாளிகளிடம் பேசுவதற்கும், சிகிச்சை அளித்து வருவதையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று மருத்துவமனை  ஊழியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர் கபில்ஹான் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவம்னை வளாகத்தின் உள்ளே உள்ள குடியிருப்பிலேயே பல மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து, சிகிச்சை அளித்து வரும் நிலையில், தனியாக மருத்துவம் செய்ததாக டாக்டர் கபில்ஹான் நீக்கப்பட்டிருப்பது, கபில்ஹான் இஸ்லாமியர் என்பதால்  யோகி அரசு வேண்டு மென்றே அவரை பதவி நீக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

.உ.பி. முதல்வர் யோகியின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டுதான் டாக்டர் கபில்ஹான் நீக்கம் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.