கோரக்பூர் : டாக்டர் கஃபீல் கானுக்கு ஜாமீன்

லகாபாத்

கோரக்பூரில் 63 குழந்தைகள் மருத்துவமனையில் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவ்ர் கஃபீல் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் 63 குழந்தைகள் உயிரிழந்தது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த விவகாரத்தில்  அந்த மருத்துவமனையில் பணி புரிந்த மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டிருந்தார்.

கஃபீல் கான் தன்னை ஜாமினில் விடுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இன்று அலகாபாத் நீதிமன்றம் மருத்துவர் கஃபீல் கானுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.