சென்னை:

மிழக மாணவர்களுக்கு இந்தி அவசியம் தேவை  என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக புதிய தமிழகம் கட்சித்தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால், மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டார். அதில் 6-ம் வகுப்பு முதல் அனைத்து மாநிலங்களிலும், தாய்மொழி  உடன், ஆங்கிலம், இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேறு சில மாநிலங்களும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதன் காரணமாக, இந்தி தேவையானால் கற்றுக்கொள்ளலாம், கட்டாயம் இல்லை என்று தேசிய கல்விக்கொள்கையில் மாற்றப்பட்டம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிளை சந்தித்த, கிருஷ்ணசாமி, இந்தி மொழி கொள்கையை புதிய தமிழகம் கட்சி முழுவதுமாக வரவேற்பதாக கூறியவர், கஸ்தூரி ரங்கனின் தேசிய  கல்வி கொள்கையில் பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  இந்தி மொழியை கற்பதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை என்ற திராவிட கட்சிகள் மீது சாடிய டாக்டர்,   விருப்பத்தின் அடிப்படையில் இந்தி படிக்கலாம் என்ற அறிவிப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இந்தியை கற்பிக்க ஏதுவான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு பெரும் வரவேற்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது இந்திக்கும் வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.