மஸ்கட்:

மனில் ‘காமன் மேன் மருத்துவர்’ என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவர் ராஜேந்திரன் நாயர் (Dr Rajendran Nair) கொரோனாவுக்கு பலியானார்.

ஓமன் நாட்டில் ருவி பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர்  இந்தியாவைச் சேர்ந்த  மருத்துவர் ராஜேந்திரன் நாயர்.  40 ஆண்டுகளுக்கும் மேலாக சுல்தானில் வசித்து வருகிறார்.  அங்குள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓமனிலும் கொரோனா தொற்று பரவிய நிலையில், டாக்டர் ராஜேந்திரன் எந்தவித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் பலருக்கு சிகிச்சை அளித்ததாகவும், இதனால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  அங்குள்ள அல் நஹ்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்,  அவருக்கு நோய் தீவிரமான நிலையில், பின்னர்   ராயல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர்  அவர் உயிர் பிழைக்க வேண்டும் பிரார்த்தனை செய்தனர், கதறி அழுதனர். ஆனால், கொரோனா அவரை உயிரை பறித்து விட்டது.

இவரது சேவை குறித்து கூறிய மஸ்கட் இந்திய சமூகக் கழகத்தின் சமூக நலச் செயலாளர் பி.எம்.ஜபீர், ராஜேந்திரன் நாயர் சிறந்த மருத்துவர் என்பதால், அவரது மருத்துவமனை எப்போதும் கூட்டமாகவே காணப்படும். பணத்தை குறிக்கோளாக நினைக்காமல், சேவையாற்றுவார்.

மருத்துவ சிகிச்சை பெற முடியாத பல வெளிநாட்டவர்களிடம் அவர் குறைந்த அளவிலான கட்டணம், அதாவது  ஒரு ரியால் மட்டுமே வசூலிப்பார், அவர்களால் அதைக்கூட கொடுக்க முடியவில்லை என்றாலும், அதை  தள்ளுபடி செய்வார். தேவையின்றி எந்தவித சோதனை செய்யவும் அறிவுறுத்த மாட்டார். இதனால் அவர்மீது பொதுமக்களுக்கு தனி மரியாதை உண்டு

தற்போது கொரோனாவுக்கு டாக்டர்  ராஜேந்திரன் நாயர் பலியாகி இருப்பது, ஓமனில்   உள்ள வெளிநாட்டவர் மற்றும் மருத்துவ சமூகத்திற்கு ஒரு பெரிய அடியாகும்.

டாக்டர் நாயர்  ஒரு சமூகத்திற்கும் மற்ற சமூகத்திற்கும் பாகுபாடு காட்ட மாட்டார். அவரைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் அவருடைய நோயாளிகள், மற்றதைப்  பற்றி கவலைப்படமால் சேவையாற்றியவர். அதனால்தான் அவர் காமன் மேன் மருத்துவர் என்று புகழப்பட்டார். அவரது மறை ஓமன் நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவருக்கு பெரிய இழப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.