டாக்டர் சாந்தா.. பெருமைக்குரிய பெருவாழ்வு
கேன்சர் என்றாலே அத்தோடு காலி என்று தமிழ் சினிமாவில் போதிக்கப்பட்ட பில்டப்புகளை தகர்த்தவர் டாக்டர் சாந்தா.
ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டால் முற்றிலும் குணமாக்கி விடலாம் என்ற மருத்துவ உண்மையை அந்த காலத்திலேயே விளக்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கானோரை உயிர் பிழைக்கச் செய்தவர்..
71ஆண்டுகள் உயிர் வாழ்வதே பெரிய சாதனை என்று கருதப்படும் கால கட்டத்தில் டாக்டர் பட்டம் முடித்து அதன் பிறகு 71 ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தவர் என்றால், அது எவ்வளவு பெரிய சாதனை!
சர்சிவி ராமன், விஞ்ஞானி சந்திரசேகர். நோபல் பரிசு தஞ்சம் புகுந்த இந்த ஆளுமைகள், டாக்டர் தாத்தாவும் தாய்மாமனும் ஆவார்கள்..
மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு விருதுகளும் அவரைத் தேடிப் போய் தங்களை பெருமைப் படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்னை அடையாறு என்றாலே புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தான் மிகப்பெரிய அடையாளம்..
அதனை நிறுவி அரும்பாடுபட்டு வளர்த்த, சென்னையில் பிறந்து வளர்ந்த டாக்டர் சாந்தா 94-வது வயதில் காலமாகியுள்ளார்..
டாக்டர் சாந்தாவின் உடல், காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.