டாக்டர் சரவணன், முத்துகிருஷ்ணன், ஸ்டாலின்

சென்னை,

டில்லியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சரவணன் கொலை மற்றும் முத்துகிருஷ்ணன் மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

டில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன்  நேற்று தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. நேற்றைய முன்தினம் அவருடைய முகநூல் பக்கத்தில் தனது ஆய்வில் நடத்தப்படும் நேர்காணல் உள்ளிட்ட அனைத்திலும் சமத்துவம் இல்லை என்று பதிவிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சொந்தப் பிரச்சனைகளால் முத்துக்கிருஷ்ணன் மனதளவில் சோர்வடைந்து இருந்தார் என்று டில்லி காவல் ஆணையர் கூறுவதை ஏற்க முடியாது என்றும் ஸ்ர்லின் கூறியுள்ளார்.

ஏற்கனவே,   எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலை வழக்கிலும் சரியான விசாரணை நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சரவணன்  வழக்கு மற்றும் முத்துக்கிருஷ்ணன் மரண வழக்கில் மத்திய அரசு நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.