மராட்டியத்தில் இந்தி திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகரான ஸ்ரீராம் லாகூ தனது 92 வயதில் நேற்றிரவு உடல்நல குறைவால் காலமானார்.

புனே நகரில் வசித்து வந்த இவருக்கு நேற்று இரவு 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.