மதுரை: மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவரது இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை மத்தியஅரசு நியமித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் சுப்பையா மீது, பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா? மதுரையில் எய்ம்ஸ் அமையவேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு கனவு மற்றும் போராட்டம். என தெரிவித்துள்ளார்.
யார் இந்த மருத்துவர்….
மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் பட்டியலில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சரவணன் சண்முகம்  பெரும் இடம்பெற்றுள்ளது.
இவர்  ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக உள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம்,  தான் குடியிருந்து வரும் பிளாட்டின், பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சென்னை நங்கநல்லூர், ராம்நகர் 3வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 210வது பிளாட்டில் வசித்து வருகிறார் சந்திரா சம்பத், அதே குடியிருப்பில் 110 வது பிளாட்டில் வசித்து வருகிறார் சுப்பையா சண்முகம். இருவருக்குமே கார் பார்க்கிங் தொடர்பாக விவகாரம் ஏற்பட்டது. டாக்டருக்கு படித்து விட்டு பொறுப்பான வேலையில் இருக்கும் சுப்பையாவின் செயல் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளானது.
இது குறித்து சந்திரா சம்பத் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தான் நடந்து கொண்டது தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டதால் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சந்திரா சம்பத். பின்னர் அக்கம்பக்கத்தினரும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களும் சுப்பையாமீதான புகாரை வாபஸ் பெற வலியுறுத்தியதால், சந்திரா சம்பத் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது.
காவல்நிலையில் இருவரும் பரஸ்பரம் எழுதிக்கொடுத்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்ட சண்டையை ஏரியாவில் வசிக்கும் நண்பர்கள், குடியிருப்புவாசிகளுக்குள் பேசி தீர்த்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். இருவரும் பரஸ்பரம் பேசி பிரச்சினையை முடித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், புகார் தொடர்பாக  ஆதம்பாக்கம் காவல்துறையினர் மருத்துவர் சுப்பையாவை விசாரணைக்கு அழைத்தும் அவர் வரவில்லை என்றும்,  அவர்  மீதான புகாரை வாபஸ் பெறச்சொல்லி சந்திராவிற்கு மறைமுகமாக அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  புகார் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டார் மருத்துவர் சுப்பையா சண்முகம்.
ஆனால், அவரது ஒழுங்கினத்துக்காக அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால்,  ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராகராகவும் உள்ள சுப்பையாவுக்கு மோடி அரசின் ஆதரவு இருப்பதால், அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தற்போது புதிய பொறுப்பு வழங்கியுள்ளது மத்தியஅரசு.