கல்லீரல் மாற்று சிகிச்சை : பாக் மருத்துவருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய மருத்துவர்!

ராச்சி

கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் சுபாஷ் குப்தா பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.

தற்போது இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடும் பதட்டம் நிலவி வருகிறது.   பஞ்சாப் மற்றும் காஷ்மீர் எல்லைகளில் இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நிகழ்ந்து வருகிறது.    ஆனால் அதையும் மீறி மனித நேயம் இரு நாட்டினரிடையே இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.   அதற்கு உதாரணமாக மருத்துவ உலகில் நிகழ்வுகள் நடந்துக் கொண்டு உள்ளன.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் சுபாஷ் குப்தா ஆவார்.   இவர் பல கல்லீறல் மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தி உள்ளார்.  பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான டவ் சுகாதார பல்கலைக்கழக மருத்துவமனையில் பலர் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.   இவர்களில் மூவர் அல்லது நால்வருக்கு சுபாஷ் குப்தா அறுவை சிகிச்சை நடத்த உள்ளார்.   மேலும் அந்த மருத்துவமனை மருத்துவர்களுக்கு இந்த சிகிச்சை நடத்த பயிற்சி நடத்தவும் உள்ளார்.

மேற்கூறிய தகவலை மேலே குறிப்பிட்டுள்ள பல்கலைக் கழக துணை வேந்தர் சையத் குரேஷி தெரிவித்துள்ளார்.  மேலும், ”சுபாஷ் குப்தாவின் பயிற்சியின் மூலம் பாகிஸ்தான் மருத்துவர்கள் எதிர்காலத்தில் தாங்களே இவ்வகை அறுவை சிகிச்சையை தனியாக நிகழ்த்துவார்கள்.   ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளிலும் பொது மருத்துவமனைகளிலும் இந்திய மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”  எனக் கூறி உள்ளார்.