சென்னை:

மிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில், வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல், மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வெளியிட்டார். சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் ஜனவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆணையாளர் தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் ஏதும் இருந்தால், ஜனவரி 22- ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் முகவரியில் திருத்தம் கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பிப்ரவரி- 3 ஆம் தேதிக்குள் சரி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பெயர், முகவரி திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பிப்ரவரி 14- ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை  ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்கான இணைய தள முகவரி: https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx (அல்லது)

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி: https://nvsp.in/home ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி மக்கள் எளிதாக திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

நடப்பாண்டில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டி ருந்த நிலையில், தற்போது, அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைக் கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

மேலும், பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பாக  வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளிலும், ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.