‘திரெளபதி’ கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படைப்பு ….!

கூட்டு நிதி முறை தயாரிப்பில் , மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடித்து வெளியாகியுள்ள படம் ‘திரெளபதி’.

1 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இதுவரை தமிழகத்தில் சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது.

இந்த படத்திற்கு வரவேற்பு எவ்வளவு இருந்ததோ எதிர்ப்பும் அவ்வளவு இருந்தது. ‘ திரெளபதி’ என்று கடவுள் பெயர் வைத்ததால்தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவாகப் புரிகிறது. அடுத்த படப் பெயரும் கடவுள் பெயர்தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்” என்று தனது ட்விட்டர் பதிவில் மோகன் கூறியிருந்தார் .

இதனிடையே ‘திரெளபதி’ படத்தின் இசையமைப்பாளர் ஜுபின் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் ரிச்சர்ட் மற்றும் இயக்குநர் மோகன்.ஜி ஆகியோர் இருக்கிறார்கள்.