திரௌபதி அடுத்து ‘ருத்ர தாண்டவம் படத்தை இயக்கும் மோகன்….!’

திரௌபதியை அடுத்து மீண்டும் ரிச்சர்ட் ரிஷையை வைத்து படம் பண்ணப் போவதாக மோகன் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த படத்திற்கு ருத்ர தாண்டவம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார் மோகன்.

முன்னதாக அலுவலக பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் மோகன். பூஜையில் ரிச்சர்ட் ரிஷி கலந்து கொண்டுள்ளார்.

இந்த படத்திலாவது ஜாதியை வைத்து கதையை ஓட்டாமல் ஏதாவது நல்ல கதையாக சொல்லுங்கள் மோகன் என சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர்.