‘திரெளபதி’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் தொலைக்காட்சி….!

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’.

1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், படத்திலிருந்த சர்ச்சையினால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது, ‘திரெளபதி’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.